|
சோவியத் ஒன்றியம் (Russian: Сове́тский Сою́з - Sovetskiy Soyuz) எனப் பொதுவாக அழைக்கப்பட்ட சோவியத் சமூகவுடைமைக் குடியரசுகளின் ஒன்றியம் (Russian: Сою́з Сове́тских Социалисти́ческих Респу́блик (СССР) - Soyuz Sovetskikh Sotsialisticheskikh Respublik [SSSR]) என்பது 1922 தொடக்கம் 1991 வரை இருந்த ஒரு அதிகாரபூர்வ சமூகவுடைமை நாடாகும். இது போல்ஷெவிக் ரஷ்யாவின் வாரிசாக உருவானது. 1945 இலிருந்து 1991 இல் கலைக்கப்படும்வரை உலகின் இரண்டு வல்லரசுகளில் ஒன்றாக இது திகழ்ந்தது. இது, 1917 இல் ரஷ்யப் புரட்சியினால் வீழ்த்தப்பட்ட ரஷ்யப் பேரரசின் எல்லைகளுக்குள் நிறுவப்பட்டு சோவியத் குடியரசுகளின் ஒன்றியமாக விரிவாக்கப்பட்டது. இந் நாட்டின் புவியியல் எல்லை காலத்துக்குக் காலம் மாறி வந்தது எனினும், 1945 இலிருந்து இது கலைக்கப்படும்வரை ஏறத்தாள ரஷ்யப் பேரரசின் எல்லைகளுடன் ஒத்திருந்தது எனலாம். எனினும் பேரரசின் பகுதிகளாக இருந்த போலந்தும், பின்லாந்தும் இதற்குள் அடங்கவில்லை. சோவியத் ஒன்றியம் பின்நாட்களில் உருவான பொதுவுடைமை நாடுகளுக்கான மாதிரியாக அமைந்திருந்தது. நாட்டு அரசும், அரசியல் நிறுவனமும் அனுமதிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சியான சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் கீழேயே இயங்கின.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.
Mercedes Car
This site monitored by SitePinger.net