|
நாவல் குறூப்வைஸ் நாவல் நிறுவனத்தில் பல் இயங்குதள மின்னஞ்சல், நாட்காட்டி, நிகழ்நிலைத்தூதுவன் மற்றும் ஆவணங்களைக் கையாளக் கூடிய கூட்டிணைந்து செயற்படும் மென்பொருளாகும். சுருக்கம்குறூப்வைஸ் பல சேவர் (வழங்கி) மற்றும் கிளையண்ட் (வாங்கி) பல இயங்குதளங்களில் இயங்கக் கூடியது. சேவரின் இயங்குதளங்கள் நாவல் நெட்வேர், லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களிலும் கிளையண்ட் விண்டோஸ் இயங்குதளத்திலும் மற்றும் சற்றே வசதி குறைவான ஜாவா இயங்குதளத்தினூடக இயங்கக் கூடிய லினக்ஸ் மற்றும் மாக்ஓஸ் X இயங்கக்கூடியது. 2007 ஆண்டின் இறுதியில் வரவிருக்கும் போன்சாய் என்கின்ற பதிப்பில் பாரியமாற்றங்கள் எதிர்பார்க்கபடுகின்றன [1]. மைக்ரோசாப்ட் அவுட்லுக் மென்பொருளுடன் இணைப்பை ஏற்படுத்தக்கூடிய குறூப் வைஸ் வெப்பக்ஸஸ் உலாவிகளைப் போன்றே இணையத்தை அணுக முடிகின்றது. இவை கணினி உலாவிகள் மாத்திரம் அன்றி கையடக்கக் கருவிகள்(Handheld/PDA) மூலமாகவும் மின்னஞ்சலை அணுகலாம். குறூப்வைஸ் இதன் 6.5 ஆவது பதிப்பில் இருந்து நிகழ்நிலைத் தூவனை உள்ளடக்கியுள்ளது. இதன் 7 வது பதிப்பானது சுசேலினக்ஸ் எண்டபிரைஸ் சர்வர் பதிப்புடன் உள்ளடக்கப்பட்டுள்ளது. இப்பதிப்பானது குறூப்வைஸ் மென்பொருளை மேலதிக செலவு ஏதும் இன்றி இயக்கப்பயன்படுத்தலாம். வரலாறுகுறூப்வைஸ் 1986 இல் வேர்ட் பேபெக்ட் இன் ஓர் நீட்சியாகவே அறிமுகம் ஆனது. அச்சமயத்தில் இது வேர்ட் பேபெக்ட் லைபரரி 1.0 என்றழைக்கப்பட்ட இது டேட்ட ஜெனரல் மற்றும் அமிகா இயங்குதளங்களில் இயங்கியது. எதிர்காலம்
மைக்ரோசாப்ட் இன் எக்ஸ்சேஞ் சர்வருடன் போட்டியிட்டு வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நாவல் பல வருடங்களாகத் தொடர்ச்சியாக நாவல் குறூப்வைஸ் மென்பொருளை விருத்திசெய்ய உள்ளது. |
|||||||||||||||||||||||||||||||||
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.
Mercedes Car
This site monitored by SitePinger.net