|
இதன் முக்கியமான பதிப்புக்களாவன விண்டோஸ் எக்ஸ்பி வீட்டுப் பதிப்பு (ஹோம் எடிசன்) (இது வீட்டுக் கணினிகளுக்கானது. இதில் கணினியை மைக்ரோசாப்ட் விண்டோஸ் டொமைன்களில் இணைக்கும் வசதிகிடையாதெனினும் நாவல் (Novell) நெட்வேர் இணைந்துகொள்ளலாம்.), தொழில்வல்லுநர் பதிப்பு (புரொபெஷனல் எடிசன்) என்பது வீட்டுப் பதிப்பின் வசதிகளுக்கு மேலதிகமா டொமைன்களில் இணைதல், இரு பணிக்கருக்கள் (Dual புரோசசர்களையும்) கொண்ட கணினிகளையும் இயக்கவல்ல இப்பதிப்பானது விண்டோஸ் பயனர்களுக்கும் தொழில், வணிகப் பயனர்களுக்கென உருவானதாகும். விண்டொஸ் எக்ஸ்பி பல்லூடகப் பதிப்பு (மீடியா செண்டர் எடிசன்) என்பது பல்லூடக வசதிகள் நிரம்பியதாகும் இதில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யலாம். இத்துடன் 64 பிட் புரோசசர்களுக்கென்றே (AMD Athlon™ 64 FX, AMD Sempron™, AMD Opteron™ மற்றும் இண்டெலினால் உருவாக்கபட்ட 64 பிட் புரோசசர்கள்) உருவாக்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி புரொபஷனல் x64 பிட் பதிப்புக்களும் அடங்கும்.
பதிப்புக்கள்விண்டோஸ் எக்ஸ்பி இரண்டு முக்கியமான பதிப்புகளாக வெளிவந்தது. விண்டோஸ் எக்ஸ்பி ஹோம் எடிசன் வீட்டுப் பாவனைக்காக உருவாக்கப் பட்டதாகும். விண்டோஸ் எக்ஸ்பி புரொபெஷனல் வர்தக மற்றும் மிகுதியாகக் கணினியைப் பாவிக்கும் வீட்டுப் பாவனையாளர்களுக்கும் என்று உருவாக்கப் பட்டதாகும். இதன் ஏனைய பதிப்புக்கள் விசேட வன்பொருடகளுக்கென்று ஐரோப்பாவிற்கு என்றும் மற்றும் விலைமலிவாக்கப்பட்ட விண்டோஸ் பதிப்புக்களும் அடங்கும். விண்டோஸ் எக்ஸ்பி புரொபஷனல் விண்டோஸ் எக்ஸ்பி ஹோம் எடிசனில் இல்லாத சில வசதிகளைக் கொண்டுள்ளது.
விசேட வன்பொருட்களுக்கான விண்டோஸ் எக்ஸ்பிசேவைப் பொதிஇயங்குதளத்தில் புதிய வசதிகளை அறிமுகம் செய்யவும் மற்றும் இயங்குதளத்தில் பிழைகளைச் சீர்செய்யவும் மேம்படுத்தல்களைச் செய்யவும் சேவைப் பொதிகளை மைக்ரோசாப்ட் காலத்திற்குக் காலம் வெளிவிடுகின்றது. சேவைப் பொதி 1இசேவைப் பொதியானது செப்டெம்பர் 9, 2002 வெளியிடப் பட்டது. இதில் USB 2.0 இயங்குதளதினூடான நேரடி ஆதரவு (விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதியில்லாமலேயே USB 2.0 ஐ ஆதரிக்கும் எனினும் இதற்கென விசேடமாகாத் தாயாரிக்கபட்ட டிவைஸ் டிரைவர்கள் அவசியம் ஆகும்). இதற்கான ஆதரவு அக்டோபர் 10, 2006 உடன் விலக்கப்பட்டுள்ளது. சேவைப் பொதி 2சேவைப் பொதி 2 மைக்ரோசாப்ட்டினால் ஆகஸ்ட் 6, 2004 இல் வெளியிடப்பட்டது. இது பெரும்பாலும் கணினிப்பாதுகாப்பு மேமப்டுத்தல்களைக் கொண்டிருந்தது. இதில் கம்பியற்ற இணைப்பை ஏற்படுத்தல் மற்றும் Bluetooth ஆதரவு போன்றவற்றை உள்ளடக்கியிருந்தது. இச்சேவைப் பொதியுடன் மலையாளம், வங்காளி ஆகிய மொழிகளுக்கான ஒருங்குறியூடான இயங்குதள ஆதரவு அறிமுகம் ஆனது. சேவைப் பொதி் 3மைக்ரோசாப்ட் சேவைப் பொதி 3 இன் சோதனைப்பதிப்பு டிசம்பர் 18 2007 முதல் பொதுவில் பதிவிறக்கக் கிடைக்கின்றது. விண்டோஸ் சேவைப் பொதி 3 இன் முழுப்பதிப்பானது ஆனது ஏப்ரல் 29 2008 அன்று வெளிவரும் என எதிர்பாக்கப்படுகின்றது. [1] மாற்றங்கள்
மாற்றங்கள் செய்யப்படாதவை
ஏனைய மேம்படுத்தல் முறைகள்புதிதாகக் கணினிகளில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளங்களை நிறுவும் போது ஹாட்பிஸ் (Hotfix) என்கின்ற இயங்குதளச் சீர்திருத்தங்களை இயங்குதளத்துடன் ஒன்றிணைத்தால் இயங்குதளம் கூடுதல் பாதுகாப்புடன் இயங்கும். இதற்கு அதிகாரப் பூர்வமாக முறைகளை விட பிறிதோர் முறையே பெரிதும் கையாளப் படுகின்றது. இதற்கு http://www.ryanvm.net/msfn/ தளத்தினூடாக இயங்குதள மேமப்டுத்தல்கள் கிடைகின்றன. இதை http://www.ryanvm.net/msfn/updatepack.html ஊடகவோ அல்லது பிட்ரொரெண்ட் முறையில் http://tracker.ryanvm.net/ ஊடாகவோ பதிவிறக்கம் செய்து விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதியுள்ள கணினிகளில் Hot fixes ஐச் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றையும் பார்க்க
வெளியிணைப்புக்கள்
உசாத்துணைகள்
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
This article is from Wikipedia. All text is available under the terms of the GNU Free Documentation License.
Mercedes Car
This site monitored by SitePinger.net